பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டை !

பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளுக்கு பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மக்கும்புர காலி அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்களுக்கான இந்த புதிய சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், கூடிய விரைவில் இந்த முறை நாடு பூராகவும் விஸ்தரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதிக்குள் மொபைல் பேமெண்ட் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇவ்வாண்டு இலங்கைக்கு குறைந்தளவிலான நிதி ஒதுக்கீடு செய்த இந்தியா
Next articleஇன்றைய ராசிபலன்02.02.2023