ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஆசிரியர் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் பட்டதாரிகளை மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

நடைபெற இருக்கும ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வகுப்புகள் நடாத்தப்படுவது தொடர்பிலான விளம்பரங்களை பார்த்த பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஆசிரியர் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் இளங்கலை மாணவர்கள் சாதாரண எளிய கணித பிரச்சனைகளை கூட இலகுவில் தீர்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் சிந்தித்தாலே அவர்களால் அதற்க்கான பிரச்சனைகளை இலகுவில் தீர்த்து கொள்வார்கள்.

அதனை விட்டு மேலதிக வகுப்புகளில் கலந்து கொண்டு அங்கு உதவி கேட்டு கற்பவர்களின் திறன்களை மேம்படுத்த பயன்பெறாது.அத்தோடு இது ஒரு கடினமான போட்டியல்ல அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்ளவர்கள்.

ஆசிரியர்களாக நியமனம் பெறுவதற்கு உரிய வயதினை கடந்தவர்களுக்கு நடாத்தப்படும் ஓர் இலகு கணித பரீட்சையே மேலதிக வகுப்புகளிற்கு சென்று நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் உரிய திகதியில் பரீட்சைக்கு சென்று அதனை சரியாக எதிர் கொள்ளுங்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.