வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிபொன்றை விடுத்துள்ளது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் எனவும் அத்தோடு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பகலில் அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில்  100 மி.மீக்கும் அதிகமான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே  40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது ஆகையால் மக்கள் தங்களின் பாதுகாப்புகளை உறுதிப்படுத்தி முன் எச்சரிக்கையுடன் செயற்ப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது

பொத்துவிலில் இருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது  மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடிய நிலை காணப்படுவதாகவும்

அத்தோடு பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக கொழும்பு வரையான பகுதிகளில் கடலலைகள் மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது அத்தோடு நாட்டை சூழ உள்ள ஏனைய கடற் பரப்புகளும் சற்று கொந்தளிப்பாகவே காணப்படும் ஆகவே கடற் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் வளிமண்டலவியல் திணைகளத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பாக நடந்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.