கிளியால் சிறை சென்ற நபர்

தைவானில் கிளியை செல்லப் பிராணியாக வளர்த்த ஒருவர் சிறை சென்றது மட்டுமல்லாமல் பல இலட்சங்கள் அபராதமும் செலுத்தியுள்ளார்.

தைவானில் கிளியை செல்லப்பிராணியாக வளர்த்த நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா ஒன்றிற்கு கிளியினை அழைத்து சென்றுள்ளார். அங்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யும் வைத்தியர் ஒருவர் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். திடீரென கிளி வைத்தியர் லினின் முதுகில் ஏறி இறக்கையை பலமுறை அசைத்தது இதனால் லின் திடுக்கிட்டு கீழே விழுந்தார்.

இதனால் கீழே விழுந்த அவர் எலும்பு முறிந்து வைத்தியசாலையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்றார் அத்தோடு அவர் பூரணமாக குணமடைய மூன்று மாதங்கள் ஆனது இச் சம்பவத்தினால் வைத்தியர் லின்னால் 6 மாதங்கள் தொடர்ந்து வேலைக்கும் செல்ல இயலவில்லை இதன் காரணமாக வருமானம் இல்லாமையால் சரியாக பாதிக்கப்பட்டு தனக்கு உரிய நிவாரணம் வேண்டும் என கேட்டு கிளி உரிமையாளர் ஹூவாங் மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கிளி உரிமையாளரான  ஹூவாங்குக்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (சுமார் ரூ.74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததாம். ஒரு கிளி பறந்ததால் சிறையும் அபராதமும் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்