Home பல்சுவை என்னதான்யா நடக்குது கேஎப்சியில?: முதலில் கோழி கக்கா, இப்போ…

என்னதான்யா நடக்குது கேஎப்சியில?: முதலில் கோழி கக்கா, இப்போ…

ஆஸ்திரேலியாவில் நிக்கோலஸ் என்பவர் கேஎப்சியில் சாப்பிட சென்று கோழிக்கறிக்கு பதில் அதில் வெந்தும், வேகாமலும் நுரையீரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆஸ்திரேலியாவின் க்வீன்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் நிக்கோலஸ்(30). ஐடி நிபுணர். அவர் லேப்ரடார் பகுதியில் உள்ள கேஎப்சி உணவகத்திற்கு சென்று சிக்கன் விங்ஸ் மற்றும் பிரஸ்ட் உணவை ஆர்டர் செய்துள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட கோழிக்கறி துண்டை எடுத்து கடித்த வேகத்தில் தூத் தூ என்று துப்பிவிட்டார். பார்த்தால் கோழிக்கறிக்கு பதில் ஏதோ நசநசவென வெந்தும், வேகாமலும் இருந்ததை பார்த்து அவருக்கு குமட்டிக் கொண்டு வந்துவிட்டது.kfc-lung-attached

மாட்டேனே

கேஎப்சியில் சாப்பிட்டது எல்லாம் போதும். இனி ஜென்மத்திற்கும் அந்த உணவகத்தில் சாப்பிடவே மாட்டேன் என்று நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.kfc-lung-attached02

கோழிக் கழிவு
முன்னதாக இங்கிலாந்தில் உள்ள வெல்லிங்போரோவில் இளம்பெண் ஒருவர் கேஎப்சி உணவகத்தில் சாப்பிடுகையில் கோழிக்கறியின் இடையே கழிவு இருந்ததை கண்டுபிடித்தார்.kfc-lung-attached01