யாழில் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகையை திருடிய மர்ம கும்பல் !

யாழில் பிரபல கோவிலான சாவகச்சேரி காளி கோவிலில் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகையையும் உண்டியலில் இருந்த 35000 ரூபா பணமும் மர்ம கும்பல் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று அதிகாலை 2 மணி அளவில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காளி கோவிலில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த வாகனதிருத்து நிலையத்தை உடைத்து அதிலிருந்து நான்கரை லட்சரூபாய் பணத்தையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் காளி அம்பாள் ஆலயத்தில் இடம் பெற்று வந்த வருடாந்த மாகோற்சபம் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் பொலிஸாரால் கைதான பெண் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்! வெளியான அதிர்ச்சி காரணம் !
Next articleயாழில் பலரையும் வியக்க வைக்கும் 81 வயது மருத்துவர்! விரிவான செய்தி !