யாழில் பலரையும் வியக்க வைக்கும் 81 வயது மருத்துவர்! விரிவான செய்தி !

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கலாநிதி அருளானந்தத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. டாக்டர் அருளானந்தம் அவர்கள் அயராதசேவை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

அவருக்கு இப்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை தனது கிளினிக்கை திறந்து சேவைகளை வழங்கி வருகிறார்.

டாக்டர் அருளானந்தம் ஏழை எளிய மக்களுக்கும், தொலைதூரத்தில் இருந்து வரும் மக்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பதுடன், மிகக் குறைந்த செலவில் மருத்துவம் செய்து வருவது இவரது சிறப்பு.

இவரிடம் சிகிச்சை பெற்ற ஏழைகள் ‘அவர் ஒரு மனித கடவுள்’ என்று போற்றுகின்றனர். 81 வயதிலும் இத்தகைய சேவை மனப்பான்மையுடன் அயராது உழைத்து வரும் டாக்டர் அருளானந்தம் அவர்களின் சேவை இன்னும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாட்டில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளால் ஏழைகளுக்கு நல்ல மருத்துவம் எட்டாக்கனியாக மாறிவிட்ட நிலையில் நம் நாட்டில் இது போன்ற ஜீவ தெய்வங்கள் உலா வருவதை நாம் பாக்கியவான்கள் என்றே சொல்ல வேண்டும்.

Previous articleயாழில் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகையை திருடிய மர்ம கும்பல் !
Next articleயாழில் இரவு உணவு உட்கொள்ள சென்ற இளைஞனுக்கு இடம்பெற்ற சோகம் ! சோகத்தில் குடும்பத்தினர் !