Home விளையாட்டு 100 குழந்தைகளுக்கு உதவும் முயற்சியில் யுவராஜ் சிங்

100 குழந்தைகளுக்கு உதவும் முயற்சியில் யுவராஜ் சிங்

yuvraj_singh_003புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்கு உதவும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அதிரடி வீரர் யுவராஜ் சிங்.
ஒருகாலத்தில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர் யுவராஜ் சிங், இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து அதிரடி காட்டத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தன்னை போன்றே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 100 குழந்தைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் கல்வி நிதியுதவி வழங்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

இதுகுறித்து அவர், TogetherWeCan என்ற இயக்கத்தின் மூலம் 100 குழந்தைகளின் 5 ஆண்டுகால கல்விச் செலவை ஏற்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எனது அனைத்து சதங்களை விடவும், புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் இந்த 100 குழந்தைகளின் கல்விக்கு அளிக்கும் ஆதரவு குறித்து மிகுந்த பெருமை அடைகிறேன் என டுவிட் செய்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு லக்ஷ்மண், சச்சின் டெண்டுல்கர், ஜாகீர் கான், ரோஹித் சர்மா, கவாஸ்கர் மற்றும் வீராட் கோஹ்லி போன்றோரும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.