இலங்கையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அண்ணனை நம்பி பணம் அனுப்பிய தங்கைக்கு டாட்டா காட்டிய அண்ணன்

இலங்கையில் அதிக வட்டி வீதத்திற்கு ஆசைப்பட்டு அண்ணனிடம் பணத்தை பறிகொடுத்த லண்டனில் உள்ள அவரது தங்கை

லண்டனில் உள்ள தங்கை இலங்கை வங்கிகளில் தற்போது வட்டி அதிகரிப்பினால் அண்ணனுக்கு  30 லட்சம் ரூபா பணம் அனுப்பி தாயின் கணக்கில் வைப்பிலிட சொல்லியுள்ளார்.அண்ணனோ பணத்திற்கு ஆசைப்பட்டு தனது வங்கி கணக்கில் வைப்பிலிட்டு தாயின் கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக தங்கைக்கு நாடகமாடி நம்ப வைத்துள்ளார் இதனையறியாத தங்கை மேலும் க 7 லட்சம் ரூபா பணத்தை வைப்பிலிட்டால் இருபது வருடங்களின் பின் ஒரு கோடி ரூபா வரும் என கணக்கிட்டு  7 லட்சம் ரூபா பணத்தினையும் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் அண்ணனின் மகள்  இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார் அவ் இளைஞன் குறித்த பெண்ணின் தந்தையால் தாக்கப்பட்டுள்ளார் இது குறித்து காதலன் பொலிசில் முறைப்பாடு வழங்கியமையால் அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன் நிலையில் அண்ணனின் மகள் தனது தந்தை அவரது தங்கையை ஏமாற்றி தனது கணக்கில் பணம் வைப்பிலிட்ட உண்மையை அத்தையிடம் அம்பலப்படுத்தியுள்ளார் அத்துடன் அவரது தாயாரின் கணக்கில் ஒரு லட்சம் மட்டுமே வைப்பிலிடப்பட்டுள்ளதையும் உறுதி செய்துள்ளார்.

இதனை தனது அண்ணனிடம் தங்கை விசாரணை செய்யும் விதத்தில் அச்சுறுத்தி கேட்ட வேளை அவரது பாதுகாப்பில் வீட்டில் இருக்கும் 75வயது தாயாரை வெளியே துரத்துவதாக அச்சுறுத்தியுள்ளார் அத்தோடு அவரது தங்கைக்கு சொல்லிக் கொடுத்த மகளையும் தாக்கியுள்ளார். முல்லைத்தீவினை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு நம்யா தங்கையை ஏமாற்றியுள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு அளிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous articleகடும்மழை காரணமாக வெள்ளக்காடான வவுனியா 23 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாதிப்பு !
Next article2வது கணவருக்கு விச ஊசி ஏற்றிவிட்டு, 3வது திருமணம் செய்த பெண் கைது!