உல்லாசமாக இருக்க இளைஞரை அழைத்த பாட்டி வைத்தியசாலையில் அனுமதி!

உல்லாசமாக இருக்கலாம் என்று விடுதி அறைக்கு வாலிபரை அழைத்து 64 வயது மூதாட்டிக்கு கடும் வலி ஏற்பட்டு இரத்தப்போக்கு உண்டானதை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்தவர் பட்ரிசியா போல்ட்ஸ். 64 வயதான இந்த மூதாட்டி சுற்றுலாவுக்காக இந்தியா வந்திருக்கிறார். இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் சென்று சுற்றுலா செய்த பட்ரிஸியா அண்மையில் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார்.

புதுச்சேரி மாநிலத்தில் புஸ்லி வீதியில் பெண்களுக்கான அழகு சாதனை கடை நடத்தி வரும் வட இந்திய வாலிபர் மேக்ராஜ் உடன் அந்த மூதாட்டிக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இருவரும் நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். இதன் பின்னர் தமிழ்நாடு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு மீண்டும் புதுச்சேரி திரும்பிய பட்ரிசியா தான் தங்கி இருந்த விடுதிக்கு வாலிபர் மேக்ராஜை அழைத்திருக்கிறார்.

இருவரும் விடுதி அறையில் உல்லாசத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அப்போது மூதாட்டிக்கு வலி அதிகமாக ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பதறிய மூதாட்டி வாலிபரை நிறுத்த சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் வாலிபர் தொடர்ந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததால் மூதாட்டிக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

தன்னை மருத்துவமனையில் கொண்டுசெல்லும்படி கூறினார். ஆனால், அதை மறுத்துவிட்டு அந்த வாலிபர் அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார். வேறு வழி இல்லாமல் தானாகவே மூதாட்டி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். நடந்ததை விசாரித்த மருத்துவர்கள் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் விசாரணை நடத்தி பாட்டியால் தாங்க முடியவில்லை என்று சொன்னபோதும் கூட நிறுத்தாமல் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மேக்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

இது தெரிந்ததும் மேகராஜ் தலைமறைவாகிவிட்டார் . அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Previous article2வது கணவருக்கு விச ஊசி ஏற்றிவிட்டு, 3வது திருமணம் செய்த பெண் கைது!
Next articleயாழில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தாலி கட்டிய மணமக்கள்!