வெள்ளை வேனில் கடத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர் ! அதிர்ச்சியில் ஊர்மக்கள் !

நபர் ஒருவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் மாளிகாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 24 வயதுடையவர் என தெமட்டகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெமட்டகொட லக் ஹிரு செவென அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்த இளைஞன் விசாரணைக்கு செல்வதாகக் கூறி ஒரு குழுவினரால் கடத்தப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞனை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்துவிட்டு, அன்று இரவு ஏழு மணியளவில் அவரது அடுக்குமாடி குடியிருப்பு முன் விட்டுச் சென்றுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் 75வது சுதந்திர தினத்தை ஆதரித்து கொண்டாடும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பேரணி !
Next articleவவுனியாவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்த மாணவர்கள் !