மஹிந்தவுக்கு மீண்டும் பிரதமர் பதவி

பிரதமர் தினேஷ் குணவர்தன தனக்கான சலுகைகளை மிக குறைந்த அளவிலே அனுபவித்து வருவதாகவும் ஆகையால் பிரதமர் பதவியை எந்த நேரத்திலும் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அறியப்படுகிறது.

இந் நிலையில் அண்மையில் ஊடகங்களில் கூட மீண்டும் மகிந்தராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்தன.மேலும் இது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் பொதுஜன பெரமுனவின் ஒரு குழு இதற்க்கு உடன்படவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னொரு தரப்பினரால் பிரதமர் பதவியை ஏற்றுகொள்ள வேண்டும் என கூறுவதாகவும் அறியப்படுகிறது

இவ்வாறு இருக்கையில் மீண்டும் பிரதமர் பதவியை மகிந்தராஜபக்ஷ ஏற்ப்பாரா இல்லையா என்பது தெரியவில்லை

Previous articleஇந்தியாவின் மூத்த பின்னணிப் பாடகி வாணிஜெயராம் காலமானார்
Next articleசட்டவிரோதமான முறையில் நடைபெற்ற முகநூல் விருந்தில் 34பேர் கைது!