எமக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் அதனை எவ்வாறு கொண்டாடுவது-அங்கஜன் இராமநாதன்

70 வருடங்களாக எமக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் சுதந்திரதினம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார் மேலும் கடந்த ஏழு வருடங்களாக எந்தவொரு சுதந்திரதின நிகழ்விலும் நான் கலந்து கொண்டதில்லை. நேற்றைய தினம் கிளிநொச்சியில் வேட்ப்பாளர் அறிமுக கூட்டம் இடம் பெற்றது அதன் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் மற்றுமொரு தரப்பினர் இன்றைய நாளை கரி நாளாக கருதி அரசியல் யுக்தியை காட்டுகின்றனர் நான் யாருக்கும் சார்பாக நிற்கவில்லை. எமக்கு சுதந்திரம் இல்லாத வேளை 75வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதில் அர்த்தம் இல்லை என இது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது கூறியுள்ளார்.

மேலும் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வேளை இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டித்தால் மக்களின் வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படும் என கூறியுள்ளார்

Previous articleசட்டவிரோதமான முறையில் நடைபெற்ற முகநூல் விருந்தில் 34பேர் கைது!
Next articleஇன்றைய ராசிபலன் 05/02/2023