திடீரென அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை !

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று திருத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக ஜனவரி 5 ஆம் தேதி எரிவாயு விலை மாற்றப்பட்டது. இதன் போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது எரிவாயு கொள்கலன் 4 ஆயிரத்து 409 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டு 1770 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleஇலங்கையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு !
Next articleமுல்லைத்தீவு பகுதியில் புதையல் தோண்டியவர்கள் கைது!