மகனின் தகாத உறவால் பறிபோன தாயின் உயிர் ! வெளியான முழு விபரம் !

மகனின் தகாத உறவால் தாய் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த மூவரால் கடத்திச் செல்லப்பட்டதாக குறித்த பெண்ணின் மகள் சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் மகன் மபிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், உரிமையாளரின் மனைவியுடன் உறவில் ஈடுபட்டதாகவும், அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர், ஹோட்டலின் உரிமையாளர் மேலும் இருவருடன் காரில் வந்து அவர்களைத் தேடி அந்த பெண்ணைக் கடத்திச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய மற்றும் சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதுணிவு படம் பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளையிட முயன்ற மாணவன் கைது!
Next articleயாழில் விடுமுறை தினத்தில் சாராய வியாபாரம் செய்த 57 வயதான முதியவர் கைது !