யாழில் விடுமுறை தினத்தில் சாராய வியாபாரம் செய்த 57 வயதான முதியவர் கைது !

அரசாங்க விடுமுறை நாளான நேற்று குருநகரில் மதுபானம் விற்ற குற்றச்சாட்டின் பேரில் சுமார் 60 மதுபான போத்தல்களுடன் 57 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸாரால் மதுபான வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 20 மதுபான போத்தல்களும் 40 குவாட்டர் மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தன்று மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleமகனின் தகாத உறவால் பறிபோன தாயின் உயிர் ! வெளியான முழு விபரம் !
Next articleநேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழில் ஒலித்த தேசிய கீதம்! !