நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழில் ஒலித்த தேசிய கீதம்! !

காலி முகத்திடலில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது.

இன நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்ட போதும், கோட்டாபய அரசாங்கத்தில் அது புறக்கணிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களால் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் விடுமுறை தினத்தில் சாராய வியாபாரம் செய்த 57 வயதான முதியவர் கைது !
Next articleஇன்றைய தினம் மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய தகவல் !