இத்தாலியின் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!

இத்தாலியில் நடைபெறவுள்ள  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் போட்டியிடுவதற்கு இலங்கை பெண்ணான  தம்மிகா சந்திரசேகர தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 இத்தாலியின் லோம்பார்டி மாகாணத்தில் வெளிநாட்டு சமூகத்தைப் பிரதிநித்தித்துவப்படுத்தும் முகமாக  pratito Democration கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

குறித்த உள்ளூராட்சி தேர்தலில் அவ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி வேட்பாளரும் அவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் இலங்கையில் கந்தானையில் பிறந்து கந்தானை புனித செபஸ்தியார் கல்லூரியிலும் கந்தானை மஸ்ஸினோட் கல்லூரியிலும் கல்வி கற்று 1984ஆம் ஆண்டு இத்தாலிக்குச் தனது19 வயதில் சென்றார் தற்போது அவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ள நிலையில் இத்தாலியின் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

Previous articleபாலின் விலை இருபது ரூபாவால் அதிகரிப்பு!
Next articleகாலநிலை தொடர்பான அறிவிப்பு!