பிரான்சில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய தீ விபத்து!

பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பிள்ளைகள் இறந்துள்ளனர். பிள்ளைகள் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.52 மணியளவில் குறித்த சம்பவம் நிகழ்ந்ததாக அயல் வீட்டில் உள்ளவர்கள் தீயணைப்பு படையினருக்கு அறிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள்  2 முதல் 14 வயது உடையவர்கள் எனவும் தெரிய வருவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பெண்ணின் கணவருக்கும் தீக்காயங்கள் ஏறப்பட்டுள்ளன .

Previous articleஉள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் 20000 வேட்பாளர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள்
Next articleவிபத்தில் உயிரிழந்த இலங்கை விஞ்ஞானியின் மரணத்திற்கான காரணம் வெளியானது