இன்றையதினம் தங்கத்தின் விலையில் பதிவான மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளது.

இதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் அடிப்படையில் 679,886 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி பதிவாகி வந்தது.

இந்நிலையில் இன்று ஒரு பவுன் 24 காரட் தங்கம் ரூ.191,900 ஆக பதிவாகியுள்ளது. இதேபோல், 22 கேரட் தங்கம் ஒரு பவுன் ரூ.175,950 ஆக இருந்தது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் இன்று 167,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த விலையில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் ஒரு பவுன் 22 காரட் தங்கம் 200,000 ரூபாவாக உயர்ந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதுருக்கியில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான மக்கள் பலி !
Next articleஇரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு!!