இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு!!

மத்திய பிரதேசத்தில் இரும்பு கம்பியால் பலமுறை சூடுபடுத்தப்பட்ட 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சதோலில் 3 மாத குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிகிச்சை என்ற பெயரில் 3 மாத குழந்தைக்கு 24 முறை இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர். உஷ்ணத்தால் 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சாத்தோலில் இது போன்ற மூடநம்பிக்கைகள் காலம் காலமாக நடந்து வருகிறது. இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க, விழிப்புணர்வு பிரசாரம் செய்வது தான் ஒரே வழி,” என்றார்.

Previous articleஇன்றையதினம் தங்கத்தின் விலையில் பதிவான மாற்றம்!
Next articleமகன் இறந்த சோகத்தில் மகளுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட தாய் ! மகன் இறந்த நாளிலேயே நேர்ந்த சோகம் !