மகன் இறந்த சோகத்தில் மகளுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட தாய் ! மகன் இறந்த நாளிலேயே நேர்ந்த சோகம் !

தமிழகத்தில் மகன் இறந்த நாளில் 37 வயது பெண் ஒருவர் தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசியை சேர்ந்தவர் பாண்டி தேவி (37). இவரது கணவர் சலிமுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி (17) என்ற மகளும், மகாராஜா என்ற மகனும் உள்ளனர்.

பாண்டிதேவி சித்துராஜபுரத்தில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தார். அவரது மகன் மகாராஜா ஜனவரி 3, 2022 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். புவனேஸ்வரி சிவகாசியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், பாண்டிதேவியும், அவரது மகள் புவனேஸ்வரியும், மகன் பிறந்தநாளையொட்டி, சாமி கும்பிட்டு, தற்கொலை செய்து கொண்டனர்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி பாண்டிதேவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், தந்தை, சகோதரர்கள், கணவர், மகன் என அனைவரும் இறந்து விட்டதாகவும், வீட்டில் ஆண் இல்லாமல் தாய், மகளுடன் வசித்து வந்ததாகவும், தொடர்ந்து வாழ விரும்பாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. .

தனக்கு சொந்தமான வீட்டை விற்று அதில் கிடைக்கும் தொகையை தனது தாய் ஞானப்பழம் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யும்படி கூறியுள்ளார்.

Previous articleஇரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு!!
Next articleஇன்றைய ராசிபலன் 07.02.2023