அரசின் வரி விதிப்பு அதிகரிப்பால் நாட்டை விட்டு 500 வைத்தியர்கள் வெளியேறி உள்ளதாக வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க அவர்கள் கூறியுள்ளார்.
அத்தோடு நாட்டில் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுபவர்களிடமிருந்து 6 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வரி அறவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் வைத்தியர்கள் நாட்டிற்கு சேவை செய்யக் கூடியவர்கள் இவர்கள் நாட்டை விட்டு செல்வதால் நாட்டின் எதிர்காலம் மிக மோசமாக பாதிக்கும் எனவும் அத்தோடு தொழில்சார் வல்லுனர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதால் நாடு எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.