நோயாளியான மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற கணவன் உயிரிழப்பு!

நோயாளியான மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற நபர் மரத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு

  மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் சுகயீனமற்ற தனது மனைவிக்காக இளநீர் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய கணவன் கால் வழுக்கியதில் கீழே சறுக்கி விழுந்து அருகில் இருந்த பலா மரக்கிளையையும் உடைத்துக் கொண்டு கீழே விழுந்தார்.

தந்தை கீழே விழுவதை பார்த்த அவரது பிள்ளைகள் கத்தி கூச்சலிட்டு அயலவர்களின் உதவியுடன் அவரை அருகில் உள்ள மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீருடன் சம்பவ இடத்துக்கு சென்ற சந்திவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர் இறந்தவரின் உடலின் வெளிப்பகுதிகளில் காயம் ஏதும் இல்லை என்பதால் சடலம் பிரேத பரிசோதனைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை முடிவுற்றதும் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு, மரண விசாரணை அதிகாரி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

Previous articleநாட்டை விட்டு  500 வைத்தியர்கள் வெளியேற்றம்
Next articleதேர்தலில் போட்டியிடும் ஆதிவாசிகளின் தலைவர்