கடவுளின் அருள் வழங்குவதாக கூறி தொடர்ந்து எட்டு நாட்கள் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மந்திரவாதி

காலி, ஓபாத பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையில் தொடர்ந்து எட்டு நாட்கள் பூஜை செய்வதாக கூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மந்திரவாதி

குறித்த சிறுமியின் தந்தை தனது பன்னிரண்டு வயது சிறுமிக்கு கடவுளின் ஆசி வழங்குவதாக கூறி மந்திரவாதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.அந்த மந்திரவாதி தொடர்ந்து எட்டு நாட்கள் பூஜை செய்தால் சிறுமிக்கு கடவுளின் அருள் கிடைக்கும் என கூறி தொடர்ந்து எட்டு நாளாக வீட்டின் அறை ஒன்றினுள் பூட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது .

குறித்த மந்திர வாதியை கைது செய்வதற்கு  ஓபாத பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleதேர்தலில் போட்டியிடும் ஆதிவாசிகளின் தலைவர்
Next articleமைத்திரியை தூக்கிலிட வேண்டும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆவேசம்