கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சர்வதேச தரத்திலான பாடசாலை

கொழும்பு துறைமுக நகரில் சர்வதேச தரத்திற்கு இணையான பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு பிரித்தானிய சுயாதீன பாடசாலைகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.பிரித்தானியாவின் மூன்று முன்னணி சிரேஷ்ட பாடசாலைகள் தூதுக் குழு ஒன்று இது தொடர்பிலான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்துடன் கலந்துரையாடுவதற்காக இந்த மாத தொடக்கத்தில் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளது .

இப் பாடசாலைகள் உலகிலே மதிப்பு மிக்க பாடசாலைகளாக சர்வதேச  ரீதியில் போட்டித் திறன் கொண்ட குழுவை உருவாக்குவதற்கும் பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கு சர்வதேச அங்கீகாரத்துடன் சகல வசதிகளுடனும் நிறுவப்பட உள்ளது கொழும்பு துறைமுகம் பல்வேறு வசதிகளுடனும் தெற்காசியாவின் சர்வதேச நகரமாகவும் நிர்மாணிக்கப்படுகின்றது.

Previous articleமஹிந்தவின் இளைய புதல்வனின் வளர்ப்பு நாயின் கழுத்தில்  90 பவுணில் தங்கச் சங்கிலி
Next articleஓரினச் சேர்க்கையின் காரணமாக உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகர் ! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !