கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி ! வீதியில் நெல் காயப்போட்டதால் நேர்ந்த விபரீதம் !

கிளிநொச்சியில் இம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது கிளிநொச்சி – பரந்தன் – பூநகரி வீதியில் ஓசியர் கடைச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன், கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் 35 வயதுடைய கனகரத்தினம் ரீகன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வாகனங்களுக்கு இடையூறாக நெல் காயப்போட்டதால் விபத்து நிகழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous articleயாழை சேர்ந்த தம்பதியினர் பிரித்தானியாவில் செய்த சாதனையால் குவியும் பாராட்டுக்கள் ! அப்படி என்ன செய்தார்கள் என தெரியுமா ?
Next articleயாழில் வங்கி கடன் பெறுவதற்கு வங்கியின் அதிகாரிகளின் கண்ணை கட்ட முயன்ற பொலிஸ் அதிகாரி மடக்கிபிடித்த பொலிஸார் !