வவுனியாவில் விவசாய காணிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானை!

நேற்று (06-02-2023) வவுனியா குப்பம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

நேற்று முன்தினம் இரவு குரக்கன், உழுந்து அங்கிருந்த பயிர்களையும் யானை சேதப்படுத்தியது.

இதனை அவதானித்த விவசாயிகள் யானையை விரட்டிய போதும் அருகில் உள்ள 4 ஏக்கர் தென்னந்தோப்புக்குள் புகுந்து தேங்காய்களை தின்று தென்னைகளை முறித்தும் சென்றுள்ளது.

இச்சம்பவத்தால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

Previous articleபுகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி ! நுவரெலியாவில் இடம்பெற்ற சோகம் !
Next articleபுதுக்குடியிருப்பில் 21 வயது இளைஞனை கொலை செய்த நண்பர்கள் !