கனடாவில் தொடர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

கனடாவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

கடந்த மூன்று மாதங்களாக  றொரன்டோவை அண்டிய பகுதிகளில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் குறித்த நபருக்கு தொடர்பு இருந்தமை தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 2ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 9 வங்கிளில் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன 59 வயதான டெனியல் க்ளாட்டினி என்பவர் முகமூடி அணிந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் இவருக்கு எதிராக பொலிஸார் 21 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். 

Previous articleமகளை காப்பற்ற சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை!
Next articleஇலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!