வேலன் சுவாமி அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பானை விடுப்பு

யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள்  வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சி பேரணியில் கலந்து கொண்டமைக்காக இன்று (08.02.2023) நண்பகல் சிவகுரு ஆதீனத்தில் வைத்து நீதிமன்ற அழைப்பானை விடுவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் தவத்திரு வேலன் சுவாமி அவர்கள் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணிக்காக ஆட்களை ஒன்று கூட்டியமை வன்முறைகளை தூண்டியமை போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இவருக்கு வழக்கு விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

Previous articleயாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்
Next articleயாழில் சட்டத்தரணியால் நடுத்தெருவில் வந்த இளம் மருத்துவரின் வாழ்க்கை!