யாழ் நெல்லியடிப் பகுதியில் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ் நெல்லியடி இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப் பொருளுடன் நெல்லியடி விசேட புலனாய்வு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மானிப்பாய் ,மற்றும் நல்லூர் பிரதேசங்களை சேர்ந்த  24, 27 வயதான இரு இளைஞர்களே ஆவர் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து  63 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு அவர்களை நாளை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதகாக நெல்லியடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Previous articleநாட்டிலுள்ள ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்
Next articleநாளாந்த இடம் பெறும் மின் வெட்டுக்களால் சேதமடையும் மின் உபகரணங்கள்