உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

வர இருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலையினை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ அவர்கள் ஊடகவியலார் சந்திப்பொன்றில் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்களின் வருமானத்தை விட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையால் உணவுப் பொருட்களின் விலையை வரும் சிங்கள தமிழ் புத்தாண்டிற்குள் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியாக கூறியுள்ளார்.

அத்தோடு பண்டிகை காலத்திற்கு தேவையான முட்டை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநாளாந்த இடம் பெறும் மின் வெட்டுக்களால் சேதமடையும் மின் உபகரணங்கள்
Next articleநாளை யாழ் வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க