விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  100 ரூபா நெல் கொள்வனவிற்கு இணக்கம் தெரிவித்தார் ஜனாதிபதி

நாட்டில் தற்போது அறுவடை செய்யப்படும்  20 சத வீதமான நெல்லை  100 ரூபா வீதம் கொள்வனவு செய்ய செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.மேலும் இதற்காக  20 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்

அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூங்காவனம் எனும் ஊரிற்கு சென்று நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்து விவசாயிகளிடம் கலந்துரையாடிய போதே இதனை கூறியுள்ளார் .

இந் நிகழ்வில் அமைச்சர் கடற்தொழில் அமைச்சர் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்ணாயக்கா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயங்க போன்ற பலரும் கலந்து கொண்டனர்