பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  திஸ்ஸமஹாராமவில் சூதாட்ட மைதானம் ஒன்றை சுற்றிவளைத்து நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் நான்கு பொலிசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

 திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே துப்பாக்கி பிரயோகம் ,மேற்கொண்டு நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளுக்கு அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் நால்வருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது..

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நால்வர் தற்போதும் பொலிஸில் சேவையில் கடமையாற்றுவதாகவும், ஓர் அதிகாரி ஹங்கம பொலிஸ் குற்றப்பிரிவில் கடமையாற்றுவதாகவும், மற்றைய அதிகாரி அரச புலனாய்வு சேவையில் கடமையாற்றுவதாகவும் நீதி மன்றில் கூறப்பட்டுள்ளது.

Previous articleயாழில் கடல் உணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
Next articleசுவிட்சர்லாந்தில் இடம்பெறும் பாரிய மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் பொலிசார்