Home கனேடிய செய்திகள் மனநலம் பாதித்த மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தாயார்: நூதன விசாரணையில் கண்டுபிடித்த பொலிசார்

மனநலம் பாதித்த மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தாயார்: நூதன விசாரணையில் கண்டுபிடித்த பொலிசார்

02-1441167127-arrest624-600கனடாவில் மனநலம் பாதித்த மகளை இரக்கமின்றி கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயாரின் செய்லை பொலிசார் நூதன விசாரணையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
ரொறோன்ரோ நகருக்கு அருகில் உள்ள மால்வெர்ன் என்ற பகுதியில் சிண்டி ஆன் ஷெரி அலி என்ற தாயார் தனது சினரா அலி(16) வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

சினராவிற்கு பெருமூளை வாத நோய் இருப்பதனால், அவரை பராமரிப்பதில் தாயாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி காலையில் பொலிசாரின் 911 என்ற அவசர எண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது.

அப்போது தாயார் ‘எனது மகள் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடப்பதாகவும், உடனடியாக வந்து உதவுமாறு’ அழைத்துள்ளார்.

உடனடியாக தீயணைப்பு வீரர்களும் மருத்துவர்களும் தாயாரின் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

வீட்டிற்கு சென்று பார்த்தபோது 16 வயதான சினரா தரையில் மூச்சு இல்லாமல் படுத்திருந்துள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

தாயாரிடம் விசாரணை செய்தபோது, ‘வீட்டிற்கு முகமூடி அணிந்துக்கொண்டு சிலர் வந்ததாகவும், அவர்கள் தாக்கியததால் தான் தன்னுடைய மகள் உயிரிழந்துள்ளதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

வீட்டை சோதனை செய்தபோது கதவு கண்ணாடி உடைந்திருந்தது. மேசைகள் திறந்த வண்ணம் இருந்தது. ஆனால், எந்த பொருட்களையும் யாரும் திருடவில்லை.

அதேசமயம், வீட்டிற்குள் மர்ம நபர்களின் கைரேகைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இன்னொரு முக்கியமான விடயத்தையும் மருத்துவர்கள் கவனித்துள்ளனர். மகள் தரையில் உயிரிழந்து கிடக்கும்போது தாயார் சோஃபாவில் அமைதியாக அமர்ந்திருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து மருத்துவர் ஒருவர் பேசியபோது, ‘மகள் அல்லது மகன் உயிரிழந்து கீழே கிடந்தால், அவர்களுடைய தாயார் அந்த சடலத்தை கட்டி பிடித்துக்கொண்டு கதறி அழுவார்கள். அவரை சடலத்திடமிருந்து பிரித்து இழுப்பது பெரும் வேதனையாக இருக்கும்.

ஆனால், இந்த தாயார் தனது மகள் சடலமாக கிடந்திருக்கும்போது அவர் அமைதியாக சோஃபாவில் அமர்ந்திருந்தது அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

இந்த சந்தேகத்துடன் தாயார் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் தொடக்கத்தில் ‘ஒரு முகமூடி அணிந்த நபர் தனது மகளுக்கு அருகில் தலையணையை வைத்துக்கொண்டு நின்றதாக கூறினார்.

ஆனால், மற்றொரு விசாரணையில் ‘முகமூடி நபர் தன்னுடைய மகளின் முகத்திற்கு மேல் தலையணையை வைத்து அழுத்தியதாக’ மாற்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மகளின் இறப்பில் தாயார் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால், மகளை அவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என பொலிசார் முடிவு செய்தனர்.

இந்நிலையில்,’ தன்னுடைய சொந்த மகளின் மீது தலையணையை வைத்து அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்தது தாயார் தான் என நிரூபணம் ஆகியுள்ளதால், அவர் மீது நேற்று பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.