கனடாவில் வீட்டு விற்ப்பனையில் வீழ்ச்சி!

கனடாவில் வீட்டு விற்ப்பனையில் பாரிய பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளதாக கனேடிய ரியல் எஸ்டேட் ஒன்றியம் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது

கனடாவில் கடந்த  2009ம் ஆண்டின் பின் இருந்து இன்று வரை வீட்டு விற்ப்பனையில் 37.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது வீடுகளின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம்  20931 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன இந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்ட அளவிலும் மிக குறைவான அளவு விற்பனையே இடம்பெற்றுள்ளது

அத்துடன் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வீடுகளின் சராசரி விலை 612204 டொலர்கள் என்பதுடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சராசரி விலை 749437 டொலர்களாகும்.

மேலும் கனேடிய மத்திய வங்கி ஆனது , கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து எட்டு தடவைகள் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது அத்துடன் வீட்டு விற்பனைக்காக பட்டியலிடப்படும் வீடுகளின் எண்ணிகையும் குறைவடைந்துள்ளது

Previous articleதேர்தல் குறித்து நிதி அமைச்சிடம் அரசு விடுத்துள்ள கோரிக்கை!
Next articleயாழில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பொலிஸ் உத்தியோகஸ்தர்