பிரான்சில் வசித்து வந்த யாழை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மாயம்!

பிரான்சின் பாரிஸ் நகரில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் பிராந்தியத்தின்  7ம் இலக்க மெத்ரோவான வில்யுப் நகரில் வசித்து வந்த 41 வயதான சிவசுப்பிரமணியம் சபேசன் என்ற நபரை கடந்த 20 நாட்களாக காணவில்லை என அவரது மனைவியார் அளித்துள்ள புகாரில் தெரிய வந்துள்ளது.

காணாமல் போன நபரின் பிள்ளைகளை யாழ்ப்பாணம்  மல்லாகம் பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் மக்களிடம் அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வதிவிட விசா கிடைக்காத நிலையில் பிரான்சின் தமிழ் கடைகள் பலவற்றில் மாறி மாறி வேலை செய்ததாகவும் காணாமல் போவதற்கு முன்னர் வீட்டு உரிமையாளரிடம் முரண்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இந் நிலையில் காணாமல் போனவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் யாழில் உள்ள அவரது குடும்பத்தினர் பெரும் துன்பத்தில் உள்ளனர் மேலும் தனது கணவனை கண்டு பிடிக்க பிரான்ஸ் நகரில் உள்ளவர்களை உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

Previous articleஇன்றைய ராசிபலன்18.02.2023
Next articleயாழில் திடீரென தோன்றிய சிவலிங்கம்