Home கனேடிய செய்திகள் அகதிகள் விடயத்தில் கனடா ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணம் – அமைச்சர் ஜோன் மக்கலம்

அகதிகள் விடயத்தில் கனடா ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணம் – அமைச்சர் ஜோன் மக்கலம்

download (4)சிரிய நாட்டு அகதிகளை வரவேற்கும் கனடாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

25,000 சிரிய அகதிகளை கடாவினுள் அழைத்து வந்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் கனடாவின் நடவடிக்கைகள் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது எனவும் குடிவரவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய அகதிகளுக்காக அனைத்துலக நிதி சேகரிப்பு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.

கனடாவை வந்தடைந்துள்ள சிரிய அகதிகளுக்கான நிதியினை சேரிக்கும் கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் இணைந்துகொண்டு பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கனடா சார்பில் இலண்டன் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர், நாட்டை விட்டு வெளியேறிய மிலலியன் கணக்கான அகதிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை முடக்குவது குறித்தும், அதிகள் வெளியேற்றத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு உள்நாட்டு மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பிலும் நாடுகளின் தலைவர்கள் ஆராய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

போர் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மில்லியன் கண்க்கான மக்கள் குறித்து 70 நாடுகள் கலந்துகொள்ளும் மாநாட்டில் கனடாவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரிய அகதிகளின் மனிதாபிமான உதவித் தேவைகளுக்காக சுமார் 12.5 பில்லியன் டொலர்களை திரட்டும் நோக்கத்துடன் இந்த லண்டன் மாநாடு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.