சந்தையில் வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதம் உயர்வு !

சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலை 300 வீதம் அதிகரித்துள்ளதால் தாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் சில டீலர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன உதிரிபாகங்கள், விளக்குகள், பக்கவாட்டு கண்ணாடிகள், தட்டுகள், இன்ஜின்கள், டயர்கள், ரப்பர் புஷ், வேஃபர்கள், ரிம்கள், கூலன்ட், பேட்டரி வாட்டர், பல்புகள், ஃபெண்டர்கள் போன்ற வாகன உதிரிபாகங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

12,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட டயர் ஒன்றின் விலை 38,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் தெரிவித்தனர். ஒருபக்க கண்ணாடியின் விலை ரூ.4,500ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சந்தையில் வாகன உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், சில நிதி நிறுவனங்கள் கடன் கடிதம் வழங்காததால் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக வாகன உதிரிபாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous articleகிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்தில் பலியான குடும்பஸ்த்தர் !
Next articleமின்கட்டணம் குறைப்பு ? வெளியான முக்கியச் செய்தி !