மின்கட்டணம் குறைப்பு ? வெளியான முக்கியச் செய்தி !

பொருட்களின் விலைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மின்சார கட்டணமும் குறைக்கப்படும் என அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

இழந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு கடினமான முடிவுகளை எடுத்தாலும் டிசம்பர் மாதத்திற்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஜனாதிபதி தனது அரசியலைப் பற்றி சிந்திக்காமல் மக்களைப் பற்றி சிந்தித்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் வரிசையில் நிற்கும் நிலை மாறி இரண்டு மாதங்களில் அந்த யுகத்தை மக்கள் கடந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleசந்தையில் வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதம் உயர்வு !
Next articleபிரித்தானியாவில் வேலை விசாக்கள்: அதிக வாய்ப்புக்கள் யாருக்கு தெரியுமா..!