வடக்கு மாகாண சபையில் உள்ள சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு சிங்கள ஊழியர்கள் !

வடமாகாண சபையில் உள்ள வெற்றிடங்களுக்கு சிங்கள ஊழியர்களை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டவர்களில் 100 பேர் வடமாகாண சபையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வடமாகாண சபையில் முதல்வர், பணியாளர்கள் உள்ளிட்ட 1200 வெற்றிடங்கள் இன்னும் உள்ளன.

மேற்படி ஆளணி வெற்றிடங்களுக்கு ஏனைய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களில் 1100 பேரை நியமிக்குமாறு வடமாகாண சபையினால் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மேற்படி வெற்றிடங்களுக்கு தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவான மக்கள் வேலையில்லாமல் இருக்கும் வட மாகாணத்தில் தற்போது தென்னிலங்கை ஊழியர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleQR முறைமையிலான எரி பொருள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!
Next articleயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞனுக்கு பிரான்சில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!