மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

ஹொரணை – இங்கிரிய வீதியில் கிரிகலஹேன பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து நேற்று(26) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணையில் உள்ள அரச பாடசாலையொன்றின் முன்னாள் மாணவர்களின் இரவு பகலாக விளையாட்டுப் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் லொகு கங்கணம்ல டொன் ஷகில கிரிஷாந்த என்ற 20 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வடிகான் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சாரதி தற்போது இங்கிரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Previous articleபிள்ளைகளின் முன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்!
Next articleயாழில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த நான்கு வயது சிறுமி