இலங்கையில் ஏலம் விடப்படும் அழகு சாதன பொருட்கள்

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் அழகு சாதன பொருட்களில் சிலவற்றை ஏலத்திற்கு விடுவதற்கு அரசாங்கம் பரிசீலனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது

இந்த தகவலினை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 4 கொள்கலன் ஒப்பனைப் பொருட்கள் இலங்கை சுங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த கொள்கலன்கள் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவற்றில் சில நல்ல தரமான தயாரிப்புகள் இருப்பதாகத் கூறியுள்ளார்.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள் தர நிர்ணயம் செய்யப்பட்டு  உள்ளூர் சந்தையில் ஏலம் விடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்

Previous articleபணம் அச்சடிக்கப்படுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர்
Next articleஇன்றைய ராசிபலன்28.02.2023