பிரான்சில் காணமல் போயுள்ளதாக கூறப்பட்ட யாழ் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பிரான்சில் வேலை செய்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக யாழில் உள்ள அவரது மனைவி யாழில் இருந்து பிரான்ஸ் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் குறித்த நபர் அவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டிருப்பதனை கண்டு பிடித்துள்ளனர்

இதனை அடுத்து இறந்தவர் பணிபுரிந்த வீட்டின் ஏனைய ஊழியர்களிடம் விசராணை மேற்கொண்டதுடன் குறித்த நபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளமை  சிசிரிவி கமெரா சோதனையில் தெரிய வந்துள்ளது அத்துடன் இறந்த நபர் கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்டு நிலையில்  மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரை சந்தேகத்தில் கைதுசெய்து விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த இலங்கையரின் சடலம் குப்பை மேடு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரான்ஸில் கொலைசெய்யப்பட்டு குப்பையில் போடப்பட்ட யாழ் குடும்பஸ்தர்!
Next articleயாழில் சற்றுமுன் திடீரென பற்றி எரிந்த புடவை கடை! பல லட்சம் பெறுமதியான புடவைகள் நாசம் !