இலங்கையில் எரிபொருள் செலவைக் குறைக்க வந்த மின்சார பேருந்துகள்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்கும் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் செலவை குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

வர்த்தக நகரமான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக வைத்து இலங்கை போக்குவரத்து சபை மின்சார பஸ்களை இயக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, முறையான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous articleயாழில் பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை ! வெளியான காரணம் !
Next articleபிரான்ஸில் கொலைசெய்யப்பட்டு குப்பையில் போடப்பட்ட யாழ் குடும்பஸ்தர்!