நாட்டில் மீண்டும் காற்றின் தர குறியீடு அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் மீண்டும் காற்றின் தர குறியீடு அதிகரித்து காணப்படுகின்றது.

அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு நேற்று (28) காலை 101 முதல் 150 வரை இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு சில உடல் பாதிப்புகளை ஏற்ப்படுத்த கூடும் எனவும் இதனால் சுவாசத்தில் சிரமம் ஏற்ப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், காற்றின் மாசு அளவு நாளை (01) சிறிதளவு குறையக்கூடும், மேலும் அடுத்த சில நாட்களில் மீண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இத் தகவலினை வெளியிட்டுள்ளது

Previous articleஇன்றைய ராசிபலன்01.03.2023
Next articleலொத்தர் பரிசு சீட்டு குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!