கிளிநொச்சியில் நீரில் மூழ்கி குடும்பத்தர் ஒருவர் பலி !

கிளிநொச்சி கிளாலி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் இன்று (01-03-2023) பகலில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குளத்தில் நீராடச் சென்ற நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிளாலி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதான மரியன் பீரிஸ் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleயாழில் மாயமான 15 வயது சிறுவன் ! பொலிஸார் விடுத்த வேண்டுகோள் !
Next articleயாழில் ரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமிட்டு 38 பவுண் நகைகள் திருட்டு!