கணவனை விட்டுவிட்டு காதலனுடன் செல்ல முயன்ற மகளை கூறுபோட்ட தந்தை!

இந்தியாவில் கணவனை பிரிந்து காதலனுடன் செல்ல முயன்ற மகளை தந்தை கொன்றுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 26 வயது பெண் சருஜா, உள்ளூர் இளைஞரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.ஆனால் சருஜாவின் பெற்றோர் அந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், பக்கத்து ஊரில் மாப்பிள்ளை பார்த்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து, மாப்பிள்ளையை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சிறுமி, இரு வாரங்களுக்கு முன் தனது பெற்றோரை பார்க்க ஊருக்கு வந்துள்ளார்.

இதன் போது பழைய காதலனை சந்தித்து இருவரும் சுற்றித்திரியும் போது சருஜா வீட்டிற்கு வருமாறு கணவன் அழைத்த போது அங்கு செல்ல மறுத்த சருஜா தனக்கு கணவன் வேண்டாம் எனவும் காதலனுடன் செல்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த தந்தை நேற்று சாருஜாவின் தலையை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசேலையில் ஜொலிக்கும் இலங்கைப் பெண் ஜனனி! வைரலாகும் புகைப்படம்
Next articleஇன்றைய ராசிபலன்02.03.2023