அமைச்சரவையில் இடம்பெற இருக்கும் புதிய நியமனங்கள்

அமைச்சரவையில் புதிதாக பத்து நியமனங்கள் இடம்பெற இருப்பதாக ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க (S.B. Dissanayake) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது இது குறித்து தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் இந்த நியமனம் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனக பண்டார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லோககே, சரத் வீரசேகர, எஸ்.எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த பட்டியல் ஏற்கனவே உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் இந்த பட்டியலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்

Previous articleவெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாரிய சிக்கல்
Next articleவியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 20 பேர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு !