யாசகம் பெறும் பெண்ணின் குழந்தையை கடத்திச் சென்ற கும்பல்

கடந்த 28 ஆம் திகதியன்று பம்பலப்பிட்டியில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த பெண்ணின் ஒன்றரை வயதுடைய குழந்தையை மூவரடங்கிய குழு ஒன்று பறித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது பெண் ஒருவரும் இரண்டு ஆண்களுமே இணைந்து இச் செயலை செய்துள்ளனர்.

குறித்த பெண் பம்பலப்பிட்டியவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு முன்பாக யாசகம் பெற்றுக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த கும்பல் குழந்தையை அபகரித்து கொண்டு தெமட்டகொடை பிரதேசத்துள்ள ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குழந்தையை கடத்தியவர்கள் தொடர்பிலான எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களே குழந்தையை கடத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

Previous articleபாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் கொழும்பு -வசந்த முதலிகே
Next articleயாழில் தனியார் பஸ் நடத்துனரால் சொகுசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்